தமிழ் சினிமாவில் தற்போது சென்சேஷன் நடிகையாக வலம் வருபவர் பிரியங்கா மோகன். இவர் தெலுங்கில் வெளிவந்த கேங் லீடர் என்ற படத்தின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்து அதன் பின் வெளிவந்த டாக்டர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
மேலும் இதனை தொடர்ந்து நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவன் மற்றும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டான் என்ற சூப்பர் ஹிட் ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். பிரியங்கா மோகன் அடுத்ததாக முன்னணி நடிகருடன் இணையவிருக்கிறார்.
ஆம் முன்னணி நடிகர் தனுஷ் நடிக்கவிருக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க பிரியங்கா மோகனிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.