அடக்கடவுளே… 29 வயது இ ளம் நடிகையுடன் டூ யட் பா ட ஆ சைப்படும் 66 வயது பிரபல முன்னணி நடிகர்!! இந்த வயசுல இப்படி ஓரு ஆசை தேவையா? யார் அந்த நடிகர் தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்படியோ அது போல தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் சிரஞ்சீவி. இவர் தெலுங்கு சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த நடிகர்களில் ஒருவரான சிரஞ்சீவி இதுவரை 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு திரையுலகில் கடந்த 40 ஆண்டுகளாக தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார் .

தெலுங்கு த விர மற்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி சமீப காலமாக சிரஞ்சீவி ரீமேக் படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார். தற்போது அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற வே தாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கு போலோ சங்கர் என பெயர் வைத்துள்ளனர். இது த விர மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற லூசிஃபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் சிரஞ்சீவி நடித்து வருகிறார். இந்நிலையில் லவ் ஸ்டோரி என்ற தெலுங்கு படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார்.

தெலுங்கில் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் தான் லவ் ஸ்டோரி. ரொ மான்டிக் படமான இந்த படத்தை  இயக்குனர் சேகர் கம்முலா இயக்கியுள்ளார். நிகழ்ச்சியில் பங்கேற்ற சிரஞ்சீவி பேசியதாவது, நல்ல வேளை போலோ சங்கர் படத்தில் சாய் பல்லவி நடிக்கவில்லை.  நான் அவருடன் டூயட் பாடவே ஆசைப்படுகிறேன்.

அவருக்கு அண்ணனாக நடிக்க வி ரும்பவில்லை என நகைச்சுவையாக கூறினார். முன்னதாக போலோ சங்கர் படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிக்க சாய் பல்லவியை தான் அணுகினார்கள். ஆனால் அவர் மறுக்க அந்த வாய்ப்பு கீர்த்தி சுரேஷுக்கு கிடைத்தது.

சிரஞ்சீவியை தொடர்ந்து நடிகை சாய்பல்லவி, எனது நடனத்தை சிரஞ்சீவி பாராட்டியது எனக்கு மிகப்பெரிய ஊக்கத்தை கொடுத்துள்ளது. நான் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். அவர் என்னைப் பற்றி பேசிய விதம் அவரது மகத்துவத்தை காண்பிக்கிறது. அவருடன் நடிக்க வேண்டும் என்ற ஆவலுடன் காத்திருக்கிறேன் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *