இந்த வருடம் ஆரம்பித்ததில் இருந்து முன்னணி நடிகர்களான அஜித், விஜய், கமல், சூர்யா என பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகி விட்டது. ரஜினியின் படம் மட்டுமே எதுவும் இதுவரை வெளியாகவில்லை, க டைசியாக ரஜினி அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார்.
படம் ஓரளவு வெற்றி பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து ரஜினி யாருடன் கூட்டணி அமைப்பார் என்று பார்த்தால் இ ளம் இயக்குனர் நெல்சனுடன் கூட்டணி அமைத்துள்ளார். நெல்சன் இயக்க அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் படத்தை தயாரிக்கிறார்கள்.’
தற்போது படம் குறித்து என்ன ஸ்பெஷல் தகவல் என்றால் 23 வருடங்கள் கழித்து மீண்டும் ரஜினியுடன் நடிக்க இந்த படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார் நடிகை ரம்யா கிருஷ்ணன். கடைசியாக இவர் ரஜினியுடன் படையப்பா படத்தில் நடித்திருந்தார்.