சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் பெரிதளவில் விரும்பி பார்க்கபடுவதோடு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த சேனலில் வெளியாகும் அனைத்து தொடர்களும் வேற லெவலில் ஹிட்டாகி வருவதோடு மட்டுமல்லாமல் அதில் நடிக்கும் நடிகர் நடிகைகளும் பிரபலமடைந்து விடுகின்றன.
அதன் மூலம் திரையுலகில் பிரபலமாகி பல வெற்றிப் படங்களில் நடித்து வருகின்றனர். இந்த சேனலில் கடந்த சில வருடங்களுக்கு முன் வெளிவந்த தொடரான கனா காணும் காலங்கள் தொடர் மக்கள் மத்தியில் நல்ல பிரபலத்தை ஏற்படுத்தியதோடு ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தது.
மேலும் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான இந்த தொடர் பள்ளி சிறுவர்களின் கதைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இப்படி இருக்கையில் இந்த தொடர் எந்த அளவுக்கு பிரபலமானதோ அதை காட்டிலும் இந்த தொடரில் நடித்த நடிகர், நடிகைகளும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இந்த தொடரை நடித்து பிரபலமானதை தொடர்ந்து இதில் நடித்த பலர் முன்னணி பிரபலங்களாக இருந்து வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து இந்த தொடரில் ராகவி எனும் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஹேமா. இவர் பிரபல முன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற பாட்சா படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார்.
மேலும் இவர் இந்த படத்தை தொடர்ந்து பூவே உனக்காக, சூர்யா வம்சம், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், பூ மகள் ஊர்வலம், காதல் கொண்டேன், மதுர, ஜி, தி மிரு போன்ற பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். மேலும் இவர் சின்னத்திரை சீரியலிலும் நடித்துள்ளார். இவர் தொடர்களில் நடித்து வந்த ஹேமா நடனத்தின் மீது கொண்ட ஆர்வத்தில் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
தற்போது சினிமாவில் நடிப்பதை த விர்த்த ஹேமா சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருவதோடு அடிக்கடி வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.அதில் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார்.
மேலும் அந்த வீடியோவில் ஹேமாவை பார்த்த ரசிகர்கள் என்னது நம்ம ராகவியா இது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு இவ்வளவு கு ண்டாகிட்டாங்க என வா யடைத்து போயுள்ளனர். இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.