விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பல இளைஞர்களின் வருங்காலம் சிறப்பாக அமைவதற்காக ஒரு சிறந்த மேடையாக அமைந்துள்ளது. அப்படி இந்த பாடல் நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களின் மனதை க வர்ந்தவர்கள் செந்தில், ராஜலட்சுமி.
மேலும் இவர்கள் இருவரும் சினிமா பாடல்கள் பாட மா ட்டோம், நாட்டுப்புற பாடல்களை மட்டுமே இந்த மேடையில் பாடுவோம் என்று முடிவெடுத்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றிப் பெற்றார்கள். இந்த ஜோடிகள் திரை உலகில் பல பாடல்களை பாடி வருகிறார்கள். இருவரும் உள்ளூர் மற்றும் வெளியூர் என பல கச்சேரிகளில் தங்களுடைய பாடலை பாடி வருகிறார்கள்.
ராஜலட்சுமி புஷ்பா படத்தில் இடம் பெற்ற வாயா சாமி பாடலை பாடியுள்ளார். அந்த பாடல் செம ஹிட்டானது. இவர்கள் இருவரும் சொந்தமாக ஒரு ஸ்டூடியோ ஒன்றையும் நடத்தி வருகிறார்கள். செந்தில் கூட ஒரு படம் கூட நடித்துள்ளார்.
ஆனால் அந்த படம் சுத்தமாக ஓடவே இல்லை. போட்டோ ஷுட், பாடல்கள் பாடுவது என பிஸியாக இருக்கும் இவர்கள் இருவரும் அண்மையில் ஒரு ஆல்பம் பாடல் நடித்துள்ளார்கள். பாடல் முழுவதும் பு ல்லட்டில் பயணிக்கிறார்கள். இருவரும் அதில் செம ஸ்டைலிஷ்ஷாக உள்ளனர்.