பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஆடல், பாடல், நடிப்பு, நேர்காணல் என அனைத்திற்கும் புதிய நிகழ்சிகளை அறிமுகம் செய்து மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இப்படி பாடலுக்கென கடந்த பல ஆண்டுகளாக ஒளிபரப்பகி இருக்கும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர்.
இதில் ஜூனியர், சீனியர் என இரு பிரிவாக வருடம் ஒரு முறை நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்து திரைப்படங்களில் பாடும் வாய்ப்பை பெற்றவர்கள் பலர் உள்ளன. இப்படி மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் பிரபலங்கள் மத்தியிலும், இசையமைப்பாளர்கள் மத்தியிலும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அதிகம்.
மேலும் இந்த நிகழ்ச்சி கடந்த சீசன் மூலம் மிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்கள் செந்தில்கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி. அந்த சீசனில் நாட்டுப்புற பாடல்களையும், தெய்வீக பாடல்களையும் பாடி அனைவரையும் அசர வைத்த இவர்கள் அந்த சீசனில் வெற்றியாளர்களாக மக்களால் தேர்வு செய்யப்பட்டனர்.
அதன் பின் அதே தொலைகாட்சியில் ஓரிரு நிகழ்சிகளில் கலந்துகொண்ட இவர்கள் தற்போது சூப்பர் சிங்கர் சேம்பியன் ஆப் சேம்பியன்ஸ் நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டு பாடல்களை பாடி வருகின்றனர். இப்படி ராஜலக்ஷ்மி இந்த முறை மா டர் ன் உ டையில் பாடல்களை பாடியுள்ளது அனைவரையும் ஆ ச்சர்யபடு தியுள்ளது இதோ அந்த புகைப்படம்..