விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்கள் அனைவரும் கொண்டாடும் மிகப்பெரிய ஹிட் சீரியல். பி ரிந்து இருந்த குடும்பங்கள் பலர் இந்த தொடர் பார்த்து ஒன்றானதாக அந்த சீரியல் குழுவினரே பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.
மேலும் அண்மையில் விஜய் டெலி அவார்ட்ஸ் விருதில் இந்த தொடருக்கு மக்கள் கொண்டாடும் சிறந்த சீரியல் என்ற விருது இந்த சீரியலுக்கு கிடைத்தது. இந்த தொடரில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஹேமா.
இவரது கதாபாத்திரம் நல்லதா, இல்லை வி ல்லியா என்பதே புரியவில்லை. ஒரு நாள் அவரது கதாபாத்திரம் நன்றாக செல்ல அடுத்த நாள் வி ல்லி போல் ச ண்டைக்கு தயாராகிறார். ஆனால் காமெடிக்கு அவர் கதாபாத்திரம் முக்கியமாக இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை ஹேமாவின் மகன் நன்றாக வளர்ந்து விட்டாரே ஹேமாவிற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது மகன் பிறந்தார் அவரது முதல் வருட பிறந்த நாளை கூட ஹேமா பெரிய அளவில் கொண்டாடினார்.
தற்போது அவரது மகனுடன் ஹேமா எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதைப் பார்த்த ரசிகர்கள் குழந்தை கியூட்டாக உள்ளார் நன்றாக வளர்ந்து விட்டார் என கமெண்ட் செய்தனர்.