தமிழ் திரையுலகில் தற்போது அனைத்து முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கும் இசையமைத்து வரும் இசையமைப்பாளர் அனிருத். இவருடைய இசையில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது.
மேலும் இதை தொடர்ந்து தனுஷின் திருச்சிற்றம்பலம், அஜித்தின் Ak 62, ரஜினியின் தலைவர் 169 என பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இவர் இசையமைத்த விக்ரம் படம் வெற்றி நடை போட்டு வருகின்றது.
இப்படி ஒரு நிலையில் சமீபகாலமாக அனிருத்தின் திருமணம் குறித்து பல செய்திகள் மீடியாவில் வந்த வண்ணம்உள்ளது. சமீபத்தில் கூட பிரபல நடிகை கீர்த்தி சுரேஷை, அனிருத் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்று தகவல்கள் வெளியானது.
ஆனால் அது முற்றிலும் பொய் என்று கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் இ ளம் பின்னணி பாடகி அனிரூத்தை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இ ளம் பின்னணி பாடகியான ஜோனிடா காந்தி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து இருந்தார்.
அப்போது அவரிடம் விளையாட்டாக திருமணம் குறித்து கேள்வி எ ழுப்பி இருந்தார்கள். அதில் சூர்யா, ரன்வீர் சிங், அனிருத் இந்த மூவரில் யாரை திருமணம் செய்து கொள்வீர்கள் என்று கேட்டிருந்தார்கள். அதற்கு அவர் இந்த மூவரில் அனிரூத் மட்டும் தான் திருமணம் செய்யவில்லை.
அந்த காரணத்தினால் மட்டும் நான் அவரை திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் அனிருத்தும் ஜோனிட காந்தி இருவரும் சேர்ந்து ஒன்றாக பணி புரிந்து இருக்கிறார்கள். என்ற தகவல் வெளியானது.