தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பாலகிருஷ்ணா. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை அடைந்தன.
சமீபத்தில் வெளியான “அகண்டா” திரைப்படம் வ சூ லை வா ரி குவித்தது. அந்த அளவிற்கு இப்படத்தின் வெற்றியை பல பிரபலங்கள் கொண்டாடினர். இப்படத்திற்கு பிறகு பாலகிருஷ்ண அடுத்து எந்த படத்தில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் தற்போது என் பி கே 107 என்ற படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை கோபிசந்த் மணினினி என்பவர் இயக்க இருக்கிறார்.
இப்படத்தில் ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்க உள்ளார். இப்படத்தில் வரலட்சுமிக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இரண்டாவது ஹீரோயினாக வரலட்சுமி சரத்குமார் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தில் வரலட்சுமி ஒரு தைரியமான பெண்மணியாக நடிப்பதாகவும் சமுதாயத்தில் நடக்கும் கேள்விகளுக்கு குரல்கொடுக்கும் சமநிலை பெண்ணாகவும் நடிக்க இருப்பதாக தகவல் க சி ந் து ள் ள து.
வரலட்சுமி சரத்குமாருக்கு இப்படம் தெலுங்கில் பெரிய அளவில் வரவேற்பை பெற்று தரும் என பலரும் கூறி வருகின்றனர். வரலட்சுமி மகிழ்ச்சியில் இருப்பதாக அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார், பலரும் வாழ்த்துக்கள் கூறி கொண்டிருக்கிறார்கள்.