நடிகர் அஜித் நடித்து மிக பெரிய ஒரு வெற்றி படமாக அமைந்த படம் தான் சிட்டிசன். இந்த படத்தில் அஜித்துடன் சேர்ந்து நடித்த நடிகை வசுந்தரா தாஸ். இவர் நடிகை என்பதையும் தாண்டி இந்திய அளவில் ஒரு பிரபலமான பாடகி மற்றும் இசையமைப்பாளர் மற்றும் பேச்சாளர், பாடலாசிரியர் என்று பன்முக திறமை கொண்டவர்.
மேலும் இப்படி பல துறைகளில் வ ல்லவ ராக இருந்து வரும் இவர் தமிழ் சினிமாவில் பாடகியாக வேண்டும் என்று தான் முயற்சி செய்து இருக்கின்றார். கல்லூரி காலத்தில் இருந்தே அதை முயற்சி செய்து வந்த இவர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘முதல்வன்’ படத்தில் கூட பாடலை பாட வாய்ப்பு கிடைத்துள்ளது.
அந்த படத்தில் இடம் பெற்ற ஷக்கலக்க பேபி என்ற பாடலை இவர் தான் பாடி இருந்தார். அந்த பாடல் மூலமாக அறிமுகமான இவர் எப்படியோ நடிக்க சம்மதித்து இது வரை தமிழில் இரண்டு படங்கள் மட்டும் நடித்திருக்கிறார். அறிமுகமான இரண்டு படங்களுமே நல்ல வரவேர்ப்பினை பெற்றது.
நடிகர் கமலுடன் சேர்ந்து ஹேராம் படத்தில் நடித்து இருந்தார். அதனை அடுத்து சிட்டிசன் அதன் பின் தமிழில் வாய்ப்புகள் இ ல்லாத காரணத்தால் இந்தி மற்றும் தெலுங்கு சினிமா பக்கம் சென்று விட்டார். ஒரு ஆங்கில படத்தில் கூட நடித்து இருக்கின்றார். இப்போது அவர் படங்கள் பக்கம் கவனம் செலுத்தாமல் இருந்து வருகின்றார்.
தற்போது சினிமாவினை விட்டு வி லகி இருந்து வருவதால் கொ ஞ்சம் ஆள் அடையாளம் தெரியாமல் மாறி இருக்கின்றார். இப்போது தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோக்கள் தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.