தமிழ் சினிமாவில் தற்போது பல நடிகைகள் அறிமுகமாகி வருகிறார்கள். அதிலும் தற்போது வாரிசு நடிகைகளின் எண்ணிக்கை தான் அதிகம். தற்போது முன்னணி நடிகர் சரத்குமாரின் முதல் மனைவி சாயாதேவிக்கு பிறந்த முதல் மகள் தான் வரலட்சுமி. இவர் தனது தந்தை மூலமாக தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார்.
நடிகை வரலட்சுமி நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி என்ற திரைப்படத்தில் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். இவர் தனது வித்தியாசமான நடிப்பபை வெளிப்படுத்தி தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றார். இப்போது தமிழ் திரைப்படத்தில் மட்டும் இல்லாமல் கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் நடித்து வருகிறார்.
நடிகை வரலட்சுமி விஜய் நடிப்பில் வெளியாகி மக்களிடையே ஒரு நல்ல ஆதரவுய் பெற்ற சர்க்கார் படத்தில் வி ல்லி கதாப்பாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பித்தார். மேலும் இவர் கன்னி ராசி என்ற திரைப்படத்தில் இ றுதியாக நடித்தார்.
தற்போது சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதே போல தற்போது என் மகன் என்று நடிகை வரலட்சுமி தனது செல்ல பிராணியான நாய் குட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.