முதன் முதலில் ஒரு தொகுப்பாளராக பணியாற்றி பின்பு தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் ரசிகர்களின் ஃபேவரட்டான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஐவரும் ஒரு பெஸ்ட் கோமாளி என்றே சொல்லலாம்.தற்போது 3 வைத்து சீசன் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டு சீசன்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்று சொன்னால் அது மிகையாகாது.
பாலா சிவாங்கி போல குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மிக முக்கியமான கோமாளியாக தொடர்ந்து ரசிகர்களை மகிழ்வித்து வருபவர் தான் மணிமேகலை. இவர் பார்ப்பதற்கு வயது குறைவாக தென்பட்டாலும் சீனியர் கோமாளி இவர் தான்.மணிமேகலை கடந்த சில ஆண்டுகளாக சன் மியூசிக், சன் டிவி மற்றும் விஜய் டிவி உள்ளிட்ட பல சேனல்களில் முன்னணி தொகுப்பாளினியாக பல நிகழ்ச்சிகளை மணிமேகலை தொகுத்து வழங்கி வருகிறார்.
அதன் பிறகு காதல் திருமணம் செய்து கொண்டார் எனபது குறிப்பிடத்தக்கது, பிறகு தனது சொந்த உழைப்பால் யூடியூப் சேனல் வாயிலாகவும் தனது கணவரும் நடன கலைஞருமான ஹுஸைனடன் இணைந்து பல வீடியோக்களை பதிவேற்றம் செய்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்று மக்களின் ஃபேவரட்டான தொலைக்காட்சி பிரபலமாக திகழ்கிறார் மணிமேகலை.ஒரு கால கட்டத்தில் மிகவும் சிரமப்பட்டு தான் ஒரு நல்ல நிலைக்கு வந்துள்ளார்கள் என்று சொல்லலாம், இந்நிலையில் மணிமேகலை மற்றும் ஹுஸைனின் விலை உயர்ந்த பைக் தற்போது திருடு போயுள்ளது.
புகைப்படத்துடன் இது குறித்து மணிமேகலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில்கூறியிருப்பது என்னவென்றால் தொலைந்து போன பைக்குடன் தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து, “எங்களது பைக் இன்று அதிகாலை அசோக் நகர் பகுதியில் திருட்டு போனது… திருமணத்திற்கு பிறகு கஷ்டப்பட்டு சம்பாதித்து ஆசையாக வாங்கிய முதல் பைக்… வருஷத்துக்கு ஒரு சம்பவம் எங்கிருந்துதான் வருதோ!!” என தெரிவித்து, “KTM RC 200 TN 10 BJ 470” என பைக் எண்ணைக் குறிப்பிட்டு, “தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது… திரும்ப கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்” பதிவிவிட்டுள்ளார். மணிமேகலையின் அந்த பதிவு இதோ…
View this post on Instagram
மணிமேகலையின் பதிவிற்கு குக் வித் கோமாளி 3ல் தற்போது குக் ஆக பங்குபெற்றுள்ள ஸ்ருதிகா அவர்கள் ஆறுதல் அளிக்கும் வகையில் பதிலளித்துள்ளார் கீழே உள்ளது.