பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியின் முலம் பிரபலமானவர் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை காண பெரிய ரசிகர்கள் கூ ட்டம் உள்ளது. மேலும் இந்நிலையில் பிரியங்காவிற்கு ரோஹித் என்ற தம்பி உள்ளார்.
அவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டுதிருமணம் ஆனது. மேலும் இதனிடையே சமீபத்தில் பிரியங்கா அவரது தம்பிக்கு குழந்தை பிறந்துள்ளதை பதிவு ஒன்றை வெளியிட்டு தான் அதிகாரபூர்வமாக அத்தை ஆகியுள்ளதாக தெரிவித்திருந்தார்.
மேலும் தற்போது அந்த குழந்தையை கையில் ஏ ந்திய படி பிரியங்கா போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது மட்டுமின்றி அந்த பதிவில் பிரியங்கா “Iha ❤️ Chiya” என பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் இது அந்த குழந்தை பெயராக இருக்கலாம் அவரின் வீட்டில் பெயர் சூட்டும் விழா நடந்து இருக்கும் என க மெண்ட் செய்து வருகின்றனர்.