இயக்குநர் விக்னேஷ் சிவன் நடிகை நயன்தாரா கழுத்தில் தாலி கட்டிய புகைப்படம் இணையத்தில் வை ரலாகி வருகின்றது. இந்த புகைப்படத்தினை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார். இதுவரை எந்தவொரு புகைப்படமும் லீக் ஆகாத நிலையில்
இயக்குநர் விக்னேஷ் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அவள் 9 நான் 1 இருவரும் இணைந்து 10 ஆனோம் என காலை 10 மணிக்கு திருமணம் நடைபெற்றதை முதல் முறையாக பிரத்யேக திருமண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
நடிகை நயன்தாரா என்ன மாதிரியான பட்டுப் புடவையை திருமணத்துக்கு பயன்படுத்த உள்ளார் என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்து வந்த நிலையில், சிகப்பு ரோஜாக்களை அடுக்கி வைத்தது போன்ற டிசைன் கொண்ட உடையில் மணமகளாக மேடையை அலங்காரித்துள்ளார்.
இயக்குநர் விக்னேஷ் சிவன் நடிகை நயன்தாரா கழுத்தில் தாலி கட்டிய நிலையில், கழுத்தில் மாங்கல்யம் தொங்கும் காட்சி இந்த புகைப்படத்தில் தெளிவாக இடம்பெற்றுள்ளது. மேலும் கணவனாக மாறியுள்ள காதலர் விக்னேஷ் சிவன் அன்பாக கொடுத்த நெற்றி மு த்தமும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.