ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜா ரஹ்மானிற்கும், ரியாஸ் உதீன் என்பவருக்கும் நேற்று சென்னையில் திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த புகைப்படத்தை ஏஆர் ரகுமான் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற இவர்களின் நிச்சயதார்த்தத்தை தொடர்ந்து நேற்று இவர்களின் திருமணம் நெ ருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றுள்ளது.
ஏஆர் ரகுமான் மகள் கத்திஜாவுக்கும் சவுண்ட் இன்ஜினியரான ரியாஸ் தின் ஷேக் முகமதுவுக்கும் திருமணம் நடந்து முடிந்தது. தற்போது திருமணம் முடிந்து அந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வை ரளாகி வருகிறது.
இதில் பலரும் கவனிக்கப்பட்ட ஒரு தகவல் என்னவென்றால் அவரோட அம்மாவின் புகைப்படம் ரகுமானின் அம்மா கரீமா பேகம் கடந்த 2020 ஆண்டு இ றந்தார். மேலும் தற்போது மகளின் திருமணத்தில் அம்மா இல்லை என்று ரகுமான் அம்மாவின் புகைப்படத்தை மேடைக்கு எடுத்து வந்து குடும்ப புகைப்படம் எடுத்துள்ளார்.