கேரளத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். நடிகை சுஜாதா இவரின் இயற்பெயர் விஜயலட்சுமி. 1977-ம் ஆண்டில் ஜெயகர் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சஜித் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். திவ்யா மருத்துவராக பணி புரிந்து வருகிறார்.போ லீஸ் ஸ்டேஷன் என்ற மலையாள நாடகத்தில் முதன் முதலாக நடித்தார்.
1971-ம் ஆண்டில் இயக்குநர் ஜோஸ் பிரகாஷ், `தபஷ்னி’ என்ற மலையாள படத்தில், சுஜாதாவை அறிமுகம் செய்தார். 1972-ம் ஆண்டில், கே. பாலசந்தர் இயக்கத்தில் `அவள் ஒரு தொடர்கதை’ படத்தில் அறிமுகமானார். அந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து சுஜாதா தமிழ் பட உலகில் பிரபலமானார். மேலும் தமிழ், தெலுங்கு உட்பட 2 மொழிகளிலும் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சுஜாதா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி படங்களில் நடித்த ஒரு இந்திய நடிகை.
அவர் தனது பல படங்களில் கமல்ஹாசனுடன் ஜோடி சேர்ந்தார். முன்னணி நடிகர்களான என்.டி.ஆர், சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், அனந்த்நாக், ஸ்ரீநாத், அக்கினேனி நாகேஸ்வரராவ், கிருஷ்ணம் ராஜு, சோபன் பாபு மற்றும் கிருஷ்ணா ஆகியோருடன் அவர் நடித்து வந்துள்ளார் .1990-ம் ஆண்டுக்குப் பிறகு, அம்மா கதாபாத்திரங்களில் நடித்தார்.
சுஜாதாவின் கடைசித் தமிழ்த் திரைப்படம், அஜித்துடன் நடித்த “வரலாறு”. பின் அவர் உ டல் நல கு றைவால் 2011-ம் ஆண்டு கா ல மானார். நடிகை சுஜாதாவின் ம ரண ம் பலருக்கும் பெரும் ஆ ச்சரிய த்தை ஏற்படுத்தியுள்ளது.