தமிழ் சினிமாவில் தனது நடிப்பால் பல ரசிகர்களை தன் கைக்குள் வைத்து இருப்பவர். நடிகர் கரண். இவர் தமிழ் சினிமாவில் நடித்து வெளியான அனைத்து படங்களும் இவருக்கு வெற்றி படமாக தான் இருக்கிறது. இவர் தனது சிறு வயதில் இருந்தே நடிக்க தொடங்கி விட்டார்.
இவர் முதலில் மாஸ்டர் ரகு என்னும் கதாபத்திரத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்து வெளியான அண்ணாமலை படம் மூலம் கோலிவுடிற்கு என்ட்ரி கொடுத்துள்ளார். அந்த படத்தில் அசோக் மகனாக நடித்திருப்பார். பின் பல முன்னணி தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகர்களில் இவரும் ஒருவர். இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்தில் இவர் கிட்டத்தட்ட 30 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.