நீண்ட வருடங்களாக ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நயன் விக்கி திருமணம் ஜூன் 9ம் தேதியில் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பல திரை பிரபலங்கள், நண்பர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த திருமணத்தில் 27 வகையான விருந்து, ஆதரவாளர்கள் ஒரு லட்சம் பேருக்கு கல்யாண சாப்பாடு என த டபு டலாக நடந்தது. இந்த திருமணத்தில் பல விஷயங்கள் பேசப்பட்டு ட்ரெண்ட் ஆகி வரும் நிலையில், நடிகை நயன்தாரா அணிந்திருந்த புடவையின் ர கசிய ம் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த புடவையை பிரபல டிசைனரான மோனிகா மற்றும் கரீஷ்மா உருவாகியுள்ளனர். இதன் எம்பிராய்டரி டிசைன்கள் ஹோய்சாளா கோயில்களின் சிற்பங்களிலிருந்து இன்ஸ்பையர் ஆகி உருவாக்கப்பட்டவை என அதன் வடிவமைப்பாளர் கூறியுள்ளார். ஹோய்சாளா கோயில் கர்நாடகாவின் உள்ள மைசூரில் அமைந்துள்ளது.
நடிகை நயன்தாராவின் பிளவுஸில் லட்சுமியின் உருவம் எம்ப்ராய்டரி மூலம் வடிவமைத்துள்ளனர். நயன்தாரா, விக்னேஷ் சிவன் பெயரும் புடவையில் வடிவமைத்துள்ளதாக டிசைனர் கூறியுள்ளார். மேலும், நயன்தாராவின் புடவைக்கு கூடுதல் அழகு சேர்த்தது அவரின் அணிகலன்கள் தான்.
இந்த அணிகலன்களை கோயங்கா (Goenka) என்ற நிறுவனம் பிரத்யேகமாக தயாரித்துள்ளது. நயன்தாராவின் அணிகலன்களை பொறுத்தவரை சாம்பியன் எமரால்ட் சோக்கர், லேட்டஸ்ட் எடிசன் போல்கி, பெரிய ரஷ்ய நெக்லஸும், எமரால்ட், வைரங்கள் பதித்த 7 அடுக்கு நெக்லஸும் அணிந்துள்ளார். இந்த தகவல் வை ரலாகி வருகிறது.