தமிழ் சினிமாவில் ஹிட் கொடுத்த திரைப்படங்கள் தற்போது வெளியாகாமல் ரசிகர்களிடம் அ திருப்தியை பெற்று வருகிறது. தல அஜித், தளபதி விஜய் உள்ளிட்டோரின் பீஸ்ட், வலிமை போன்ற திரைப்படங்கள் தோ ல்வியை த ழுவிய நி லையில் ரசிகர்கள் மிகப்பெரிய வ ருத்தத்தில் இருந்து வருகின்றனர். தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படங்களின் கதைகளை கவனித்து வருகிறார்.
நடிகை ஜோதிகாவும் தற்போது பல திரைப்படங்களில் நடிக்க கமிட்டாகி வருகிறார். சமீபத்தில் பிரபல இயக்குனரின் கதையை கேட்ட இருவரும் நடிக்க மறுத்து விட்டனர். இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான காத்துவாக்குல 2 காதல் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த திரைப்படத்தில் சமந்தா, நயன்தாரா, போன்றோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ஹிட் கொடுக்கா விட்டாலும் கமர்சியல் ரீதியாக ரசிகர்களிடையே நல்ல பெயரை பெற்றுள்ளது. தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வரும் ஜூன் மாதம் வெளியாகவுள்ள விக்ரம் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து இடம் பொருள் ஏவல், மாமனிதன் போன்ற திரைப்படங்கள் விஜய் சேதுபதி கைவசம் உள்ள நிலையில் பிரபல நடிகை ஜோதிகாவுடன் நடிக்க ம றுத்துள்ளார்.நடிகை ஜோதிகா தற்போது பல திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில், பெண்களுக்கு முக்கியமான கதை அம்சமுள்ள திரைப்படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.
இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகரும் ஜோதிகாவின் கணவருமான சூர்யாவின் நடிப்பில் சூர்யா 41 திரைப்படத்தில் ஜோதிகா நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். காக்க காக்க, சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட திரைப்படங்களில் ஜோடியாக நடித்த சூர்யாவும் ஜோதிகாவும், திருமணத்திற்குப் பின் ஜோடியாக நடிக்கப் போகும் படம்.
இயக்குநர் ஏஆர் முருகதாஸின் சிஷ்யனான இயக்குனர் சரவணன் எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி போன்ற திரைப்படங்களை இயக்கி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர். இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் ஜோதிகாவிற்கு ஏற்றார் போல ஒரு அழகான கிராம கதையை மையமாகக் கொண்டு படத்தை இயக்கலாம் என்று முடிவு செய்திருந்தார்.
ஆனால் இந்த திரைப்படத்தின் கதையை கேட்ட ஜோதிகாவும், விஜய் சேதுபதியும் நடிக்க ம றுப்பு தெரிவித்துள்ளார்களாம். இவர்கள் இருவரும் பல திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் இயக்குனர் சரவணன் இயக்கத்தில் நடிப்பதற்கான கால்ஷீட் இவர்கள் இருவரிடமும் இ ல்லையாம். இதனால் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிகர் கதிரை வைத்து திரைப்படத்தை இயக்க உள்ளாராம் சரவணன்.
மேலும் பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்த நடிகர் கதிர் தளபதி விஜய்யின் பிகில் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பின் இவர் நடித்த பல திரைப்படங்கள் தோ ல்வியை த ழுவிய நிலையில் தற்போது சரவணன் இயக்க இருக்கும் திரைப்படம் இவருக்கு கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.