விஜய் தொலைக்காட்சியில் குடும்ப பாங்கான தொடர்களில் ஒன்று தான் நாம் இருவர் நமக்கு இருவர் இந்த தொடர் ரசிகர்களால் ரசிக்கப்படும் ஒரு தொடர் இதில் நடிகைகளை தாண்டி மாயன் என்ற ஒரு கதாபாத்திரத்திற்காகவே மக்கள் பார்க்கிறார்கள். இந்த தொடரின் பெயரில் வேறொரு கதை ஓடிக் கொண்டிருந்தது அதில் தாமரை என்ற வே டத்தில் நடித்து வந்தவர் ரஷ்மிகா.
கொ ரோனா காரணமாக சீரியல் படப்பிடிப்பு அப்படியே நி றுத்தப்பட்டது. அதன் பிறகு வேறொரு கதைக்களத்தில் அதே பெயரில் தொடர் பயணித்து வருகிறது. நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலுக்கு பிறகு ரஷ்மிகாவிற்கு ஜெயராஜ் என்பவருடன் திருமணம் நடந்தது அந்த புகைப்படங்களை அவரே வெளியிட்டார்.
மேலும் அதன் பின் ரஷ்மிகா ராஜபார்வை என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து வர அந்த சீரியலையும் சீக்கிரமே முடித்து விட்டார்கள். இந்த நிலையில் நடிகை ரஷ்மிகா கர்ப்பமாகியுள்ளார். கர்ப்ப நேரத்தில்சில புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். தற்போது அவருக்கு சீமந்த நிகழ்ச்சி நடந்துள்ளது. புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.