பாரதி கண்ணம்மா சீரியல் நடிகரின் அருணின் காதலி இவங்களா .. இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!
பாரதி கண்ணம்மா தொடரின் ஹீரோ அருணுக்கும், பிரபல வில்லி நடிகைக்கும் காதல் என தகவல்கள் காட்டுத்தீயாய் பரவின.இதை உறுதிப்படுத்தும் விதத்தில் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடரின் நாயகன் அருண் பிரசாத், பலவிதமான முகபாவனைகளால் பெண் ரசிகைகளின் மனதை கொள்ளை கொண்டார்.
மேயாத மான் படத்தில் நடித்திருந்தாலும், அருணுக்கு பெயரை பெற்றுத்தந்தது என்னவோ பாரதி கண்ணம்மா தொடர் தான்.இதில் நாயகியாக நடித்து வந்த ரோஷினி ஹரிபிரியன் தொடரை விட்டு விலக, புது கண்ணம்மாவாக களமிறங்கினார் வினுஷா தேவி.ஆரம்பத்தில் என்னவோ கதை விறுவிறுப்பாக இருந்தாலும், தற்போது சலிப்பை தட்டுவதாக கூறுகின்றனர் அத்தொடரின் ரசிகர்கள்.அழகான காதலியுடன் பாரதி கண்ணம்மா அருண்? அப்போ அது உண்மை தானா? இந்நிலையில் அருணுக்கும்,
பிரபல வில்லி நடிகையான அர்ச்சனாவுக்கு காதல் என கிசுகிசுக்கள் உலாவந்தன.இத்தகவலை இருவரும் மறுக்காத நிலையில், விருது வழங்கும் நிகழ்ச்சியில் அர்ச்சனாவை டாக்டர், டிஎன்ஏ என்றெல்லாம் கலாய்க்க அருணோ வெட்கத்துடன் ரசித்துக் கொண்டிருந்தார். இதுமட்டுமா இருவருக்கும் நிச்சயதார்த்தமே முடிந்து விட்டது எனவும் தகவல்கள் பரவின.இந்நிலையில் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது, இவர்களுடன் நடிகை ரித்திகாவும் உடனிருக்கிறார்.