விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் அனைத்து சீரியல்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அப்படி பெரியளவில் ஹிட் கொடுத்து வரும் சீரியலில் ஒன்று பாரதி கண்ணம்மா. சமீபத்தில் அந்த தொலைக்காட்சி சிறந்த கலைஞர்களை புகழும் வகையில் விருது கொடுத்துள்ளது.
மேலும் கடந்த ஆண்டு பாரதி கண்ணம்மா சீரியலின் கதாநாயகன் அருண் பிரசாத் சிறந்தநடிகருக்கான விருதினை பெற்றார். ஆனால் இந்த வருடம் அதை இ ழந்தார். இவரைப் பற்றிய ஒரு விஷயம் நிகழ்ச்சி மூலம் தெரிய வந்துள்ளது. அதாவது இந்த விருது விழாவில் ராஜா ராணி 2 தொடரில் வி ல்லியாக நடிக்கும் அர்ச்சனாவிற்கு விருது கிடைத்தது.
அப்போது அவரை தொகுப்பாளர்கள் பாரதி, டாக்டர், DNA போன்ற விஷயங்களை கூறி கி ண்டல் செய்தார்கள். அருண் பிரசாத் மற்றும் அர்ச்சனா இருவரும் கா தலிக்கிறார்களா என்ற பேச்சு மக்களிடம் எழுந்து விட்டது. நிகழ்ச்சிக்கு பிறகு அருண் பிரசாத் மற்றும் அர்ச்சனா கா தலில் இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.