விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஓலிபரப்பாகி வரும் நிகழ்ச்சி சூப்பர் சீசன்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இதில் தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 8 நடைபெற்று வருகிறது.
மேலும் நடுவர்களாக இதில் கே.எஸ். சித்ரா, ஷங்கர் மகாதேவன், கல்பனா, எஸ்.பி. சரண் என மக்களுக்கு பிடித்த பின்னணி பாடகர்கள் நடுவர்களாக இருந்து வருகிறார்கள். இதில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியளவில் பல மொழிகளில் பாடல்களை பாடி வருபவர் ஷங்கர் மகாதேவன்.
இவர் பாடிய என்ன சொல்ல போகிறாய், மேற்கே மேற்கே, வாடி என் தங்க சேல, நீயா பேசியது என பல பாடல்கள் ரசிகர்கள் மனதில் இன்றும் நீங்கா இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் பின்னணி பாடகர் ஷங்கர் மகாதேவன் தனது மனைவி மற்றும் இரு மகன்களுடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது.