நடிகர் விஜய்யுடன் நடிக்க ஆசைப்படும் 18 வயது இ ளம் நடிகை!! யார் அந்த நடிகை தெரியுமா??

சினிமா

நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வருகிற 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என தெரிவித்துள்ளன. மேலும் இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கப் போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு படக்குழுவிடம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள். விஜய்க்கு ஜோடியாக நடிக்க பல நடிகைகள் ஆசைப்படுவார்கள்.

ஆனால் அந்த வகையில் தற்போது தெலுங்கு திரையுலகில் 18 வயதில் சென்சேஷன் நடிகையாக வலம் வரும் கீர்த்தி ஷெட்டி விஜய்யுடன் இணைந்து ஜோடியாக நடிக்க ஆசை என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தற்போது தமிழ், தெலுங்கு என உருவாகியுள்ள தி வாரியார், மற்றும் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படங்கள் மூலம் தமிழில் என்ட்ரி கொடுக்கவுள்ளார் நடிகை கீர்த்தி ஷெட்டி.

Leave a Reply

Your email address will not be published.